காவிரி நீர்பிடிப்பு பகுதியில் தொடரும் கனமழை : கபினி, கே.ஆர்.எஸ் அணையில் நீர் திறப்பு அதிகரிப்பு

கர்நாடக மாநில அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தற்போது 80 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
காவிரி நீர்பிடிப்பு பகுதியில் தொடரும் கனமழை : கபினி, கே.ஆர்.எஸ் அணையில் நீர் திறப்பு அதிகரிப்பு
x
காவிரி நீர்பிடிப்பு பகுதியில் தொடரும் மழை காரணமாக, கபினி, கிருஷ்ண ராஜ சாகர், ஹாரங்கி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அந்த அணைகள் முழுக்கொள்ளளவை எட்டியுள்ளன. இதனைதொடர்ந்து, கபினி அணையில் இருந்து 30 ஆயிரம் கனஅடியும், கிருஷ்ண ராஜ சாகர் அணையில் இருந்து 50 ஆயிரம் கனஅடி வீதம், மொத்தம் 80 ஆயிரம் கனஅடி நீர் தமிழகத்திற்கு திறக்கப்பட்டுள்ளது. 

ஒகேனக்கல் காவிரியில் வெள்ளப்பெருக்கு :  பரிசல் இயக்க, அருவியில் குளிக்க தடை நீட்டிப்பு 


நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக ஒகேனக்கல் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அபாய வளைவை தாண்டி தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால், பரிசல் இயக்கவும், அருவியில் குளிக்கவும் விதிக்கப்பட்ட தடை 15-வது நாளாக நீடிக்கிறது. காவல், தீயணைப்பு, ஊர்க்காவல்படை மற்றும் மாவட்ட வருவாய்த்துறையை சேர்ந்தவர்கள் ஆங்காங்கே முகாமிட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வெள்ளப்பெருக்கு காரணமாக ஒகேனக்கல் காவிரி கரையில் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடுவது கேள்விகுறியாகி உள்ளது. 




Next Story

மேலும் செய்திகள்