மேட்டூர் அணை நீர்மட்டம் 88 அடியை எட்டியது-2 நாளில் 100 அடியை எட்டும் என எதிர்பார்ப்பு

கர்நாடகாவில் இருந்து வினாடிக்கு ஒரு லட்சம் கனஅடி நீர்திறக்கப்பட்டு உள்ள நிலையில், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 60 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணை நீர்மட்டம் 88 அடியை எட்டியது-2 நாளில் 100 அடியை எட்டும் என எதிர்பார்ப்பு
x
கர்நாடக மாநிலத்தில் உள்ள பிரதான அணைகள் நிரம்பியுள்ள நிலையில், அங்கிருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு வினாடிக்கு ஒரு லட்சம் கனஅடியை தாண்டியுள்ளது. தமிழக, கர்நாடக எல்லையான பிலிகுண்டு மற்றும் ஒகேனக்கலுக்கு தற்போது வினாடிக்கு 98 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு நிர்வரத்து வினாடிக்கு 60 ஆயிரத்து 120 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் நீர்மட்டம் 87 புள்ளி 92 அடியாக உயர்ந்துள்ளது. நீர்வரத்து காரணமாக அணையின் நீர் இருப்பு 50 புள்ளி 30 டி.எம்.சி.யாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில், 2 நாளில் மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியை எட்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படும் தேதி இன்று அல்லது நாளை வெளியாகலாம் என விவசாயிகள் எதிர்நோக்கி உள்ளனர். இதனிடையே காவிரி கரையோரப் பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல தமிழக, கர்நாடக அரசுகள் அறிவுறுத்தி உள்ளன. ஒகேனக்கலில் வெள்ளப் பெருக்கு அதிகரித்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க மற்றும் பரிசல் இயக்கம் தடைவிதிக்கப்பட்டு உள்ளது. பொதுப் பணித்துறை அதிகாரிகள் நீர்வரத்தை தொடர்ந்து கண்காணித்து வரும் நிலையில், கர்நாடகாவில் இருந்து நீர் திறப்பு இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்