15 ஆயிரம் கிலோவும் தங்கம்..?...அதிர்ச்சியில் சிவகாசியின் பிரபல வங்கி - தலைசுற்றி கிறுகிறுத்த மேனேஜர்

x

15 ஆயிரம் கிலோவும் தங்கம்..?...அதிர்ச்சியில் சிவகாசியின் பிரபல வங்கி - தலைசுற்றி கிறுகிறுத்த மேனேஜர்

சிவகாசி தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில், போலி தங்க நகைகளை அடமானம் வைத்து, 7 கோடியே 55 லட்சம் ரூபாய் மோசடி செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

சிவகாசி பேருந்து நிலையம் அருகே இயங்கி வரும் யூனியன் பாங்க் ஆப் இந்தியா வங்கி கிளையில், நகை அடமானம் வைத்து பணம் பெற்றதில் மோசடி நடந்திருப்பதாக வங்கி மேலாளர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதில், தூத்துக்குடியை சேர்ந்த பாலசுந்தரம் மற்றும் நகை மதிப்பீட்டாளராக பணிபுரியும் முத்துமணி ஆகியோர் சேர்ந்து, 15 ஆயிரத்து 427 கிராம் எடை கொண்ட போலியான நகைகளை வங்கியின் லாக்கரில் வைத்துவிட்டு, 7 கோடியே 55 லட்சத்து 56 ஆயிரம் ரூபாயை மோசடி செய்ததாக தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து பாலசுந்தரம் மற்றும் முத்துமணியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்