இன்று +2 தேர்வு முடிவுகள் - 9.30 மணிக்கு வரும் மெசேஜ் | 12th exam result

x

பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படும் என தேர்வுத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதத்தில் 12-ம் வகுப்பு பொது தேர்வுகள் நடந்தன. 8 லட்சம் பேர் தேர்வு எழுதினர். இந்நிலையில், இதன் முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு சென்னை கல்லூரி சாலையில் உள்ள தேர்வுத்துறை இயக்குனர் அலுவலகத்தில் வெளியிடப்படும் என்று அதன் இயக்குநர் சேதுராம வர்மா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மாணவர்கள் பதிவு செய்துள்ள மொபைல் எண்களுக்கு உடனடியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் என்றும், அனைத்து பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகள் வெளியிடுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், இணையதளங்கள் வாயிலாகவும், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகங்களில் உள்ள தேசிய தகவலியல் மையங்கள், நூலகங்களிலும் தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறியலாம் என கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்