இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (16-08-2023) | 11 PM Headlines

x

கர்நாடக அணைகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு நீர் திறக்க எதிர்ப்பு....

மண்டியாவில் காவிரியில் இறங்கி விவசாயிகள் போராட்டம்.......


லேண்டர் கேமரா மூலம் நிலவின் மேற்பகுதியை படம் பிடித்த சந்திரயான்-3 விண்கலம்........

லேண்டரில் உள்ள கிடைமட்ட வேக கேமரா மூலம் புகைப்படம் எடுத்ததாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்....


மதுரை முனிச்சாலை பகுதியில் பின்னணி பாடகர் டி.எம்.சௌந்தரராஜன் உருவ சிலை திறப்பு..

முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்....


நீட் தேர்வு விவகாரத்தில் ஆளுநர் மற்றும் மத்திய அரசை கண்டித்து திமுக இளைஞரணி, மாணவரணி, மருத்துவ அணி சார்பாக உண்ணாவிரத போராட்டம்...

வருகிற 20ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு....


அதிமுக மாநாடு வெளியே தெரியாமல் இருக்க 20-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துகிறது திமுக என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு....

நீட்டை எதிர்த்து போராட திமுகவுக்கு என்ன தகுதி இருக்கிறது என்றும் கேள்வி....


நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க முடியாது என்று தெரிவிக்கும் ஆளுநருக்கு அதிமுக கண்டனம் தெரிவிக்காதது ஏன்?.....

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி......


Next Story

மேலும் செய்திகள்