உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் - வங்கதேசத்தை வீழ்த்தி நியூசி. ஹாட்ரிக் வெற்றி

x

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 11வது போட்டியில் வங்கதேசத்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, நியூசிலாந்து ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்துள்ளது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் பவுலிங்கை தேர்வு செய்தார். ஆட்டத்தின் முதல் பந்திலேயே வங்கதேச தொடக்க வீரர் லிட்டன் தாஸ், டிரெண்ட் போல்ட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்தவர்களில் கேப்டன் ஷகிப் அல் ஹசன் - முஷ்பிகுர் ரஹீம் ஜோடி பார்ட்னர்ஷிப் அமைத்து ரன் சேர்த்தது. ஷகிப் அல் ஹசன் 40 ரன்களிலும், ரஹீம் 66 ரன்களிலும் பெவிலியன் திரும்பினர். மகமதுல்லாவின் பங்களிப்பால் 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு வங்கதேசம் 245 ரன்கள் சேர்த்தது. நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக வேகப்பந்து வீச்சாளர் ஃபெர்குசன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.


Next Story

மேலும் செய்திகள்