உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் - வங்கதேசத்தை பந்தாடியது இங்கிலாந்து

x

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 7வது போட்டியில் வங்கதேசத்தை 137 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வீழ்த்தியது.

ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள தரம்சாலா மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம், பவுலிங்கை தேர்வு செய்தது. தொடர்ந்து பேட்டிங்கை தொடங்கிய இங்கிலாந்துக்கு டேவிட் மலான், பேர்ஸ்டோ ஜோடி நிலையான தொடக்கம் தந்தது. பேர்ஸ்டோ 52 ரன்கள் எடுத்து ஷகிப் அல் ஹசன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ஜோ ரூட் நிதானமாக ஆடிய நிலையில், சிக்சர்களைப் பறக்கவிட்ட டேவிட் மலான் சதம் விளாசினார். மறுமுனையில் ஜோ ரூட்டும் அரைசதம் அடித்தார். 140 ரன்கள் எடுத்து டேவிட் மலான் ஆட்டமிழக்க, 82 ரன்களில் ரூட் வெளியேறினார். 50 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து 9 விக்கெட் இழப்புக்கு 364 ரன்கள் குவித்தது.


Next Story

மேலும் செய்திகள்