மகளிர் ப்ரீமியர் லீக் தொடர்.. குஜராத்தை வீழ்த்தியது மும்பை

x

மகளிர் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில் குஜராத்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை வீழ்த்தியது.

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத், மும்பை பவுலிங்கை சமாளிக்க முடியாமல் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் எடுத்தது. மும்பை சுழற்பந்து வீச்சாளர் அமேலியா கெர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் 127 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணி, 19வது ஓவரின் முதல் பந்தில் 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் இலக்கை எட்டியது. மும்பை கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 46 ரன்கள் அடித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் வெற்றிக்கு வழிவகுத்தார். நடப்பு தொடரில் மும்பை அணி 2வது வெற்றியை பெற்றுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்