0 ரன்.. 7 விக்கெட்...வரலாற்றில் முதல்முறை 17 வயதில் யாரும் உடைக்க முடியாத சாதனை படைத்த வீராங்கனை

x

சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட் போட்டிகளில், ரன்களையே விட்டுக் கொடுக்காமல் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி, இந்தோனேசிய வீராங்கனை சாதனை படைத்துள்ளார். இந்தோனேசியாவில் உள்ள பாலியில், இந்தோனேசியா, மங்கோலியா அணி வீராங்கனைகள் மோதிய டி20 போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தோனேசிய மகளிர் அணி 127 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தோனேசியாவின் 17 வயது இளம் வீராங்கனையான ரோமாலியா, 3.2 ஓவர்கள் பந்துவீசி ஒரு ரன் கூட விட்டுக் கொடுக்காமல் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி உலக சாதனை படைத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்