டெஸ்ட் போட்டிகளில் இருந்து விராட் கோலி விலகல் - பிசிசிஐ முக்கிய அறிவிப்பு | Virat Kohli

x

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி வருகிற 25ம் தேதி ஹைதராபாத்தில் தொடங்கும் நிலையில், இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சொந்த காரணங்களுக்காக முதல் இரண்டு போட்டிகளில் இருந்து விலகியதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இதுதொடர்பாக கேப்டன் ரோகித் சர்மா, அணி நிர்வாகத்திடம் கோலி விளக்கிவிட்டதாகவும், அவரது முடிவுக்கு மதிப்பளிப்பதோடு, தனிப்பட்ட காரணங்களின் தன்மை குறித்த யூகங்களை ரசிகர்கள் தவிர்க்குமாறும் பிசிசிஐ கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், கோலிக்கான மாற்று வீரர் விரைவில் அறிவிக்கப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்