"இவர் வேண்டாம்" என ஒதுக்கிய பஞ்சாப்புக்கு வெற்றி தேடி தந்த வீரர்

x

#shashanksingh | #punjabkings | #ipl2024

"இவர் வேண்டாம்" என ஒதுக்கிய பஞ்சாப்புக்கு வெற்றி தேடி தந்த வீரர் - இந்தியாவே கொண்டாடும் புது நாயகன்..!

ஐபிஎல் ஏலத்தின்போது பஞ்சாப் அணி தவறுதலாக ஏலம் எடுத்த வீரரான சஷாங் சிங், நேற்றைய போட்டியில் அந்த அணியின் வெற்றிக்கு உதவியுள்ளார். பெயர்க் குழப்பத்தால் 32 வயது சஷாங் சிங்கை ஏலத்தின்போது தவறுதலாக பஞ்சாப் அணி வாங்கியது. இதனை ரத்து செய்யுமாறு பஞ்சாப் நிர்வாகம் விடுத்த கோரிக்கை ஏலத்தின்போது நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில், தவறுதலாக பஞ்சாப் அணி வாங்கிய அந்த சஷாங் சிங் தான் நேற்றைய போட்டியில் 29 பந்துகளில் 61 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் பஞ்சாப்பின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்