கோட்டைக்குள்ளேயே சரிந்த RCB... உள்ளேயே புகுந்து நொறுக்கிய கொல்கத்தா

x

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணியில் கேப்டன் டூபிளஸ்ஸி ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடிய கிரீன் 33 ரன்களும், 2 முறை கேட்ச் வாய்ப்பில் இருந்து தப்பிய மேக்ஸ்வெல் 28 ரன்களும் எடுத்தனர். நிலைத்து நின்று ஆடிய கோலி அரைசதம் அடித்தார். இறுதி ஓவர்களில் தினேஷ் கார்த்திக் மூன்று சிக்சர்களைப் பறக்கவிட பெங்களூரு அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் சேர்த்தது. 59 பந்துகளில் கோலி 83 ரன்களும் 8 பந்துகளில் தினேஷ் கார்த்திக் 20 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்