வெளியானது தமிழ்நாட்டின் IPL-ஆன TNPL தேதிகள் | tnpl t20

x

#tnplt20 | #schedule

வெளியானது தமிழ்நாட்டின் IPL-ஆன TNPL தேதிகள்

2024ம் ஆண்டுக்கான டி.என்.பி.எல் டி20 கிரிக்கெட் தொடர் வருகிற ஜூலை 5ம் தேதி தொடங்க உள்ளது. நெல்லை, திண்டுக்கல், சேலம், கோவை, சென்னை ஆகிய நகரங்களில் டி.என்.பி.எல் போட்டிகள் நடைபெற உள்ளன. ஜூலை 5ம் தேதி சேலத்தில் நடைபெறும் முதல் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் லைக்கா கோவை கிங்ஸ் அணிகள் மோத உள்ளன. மொத்தமாக 28 லீக் போட்டிகள் மற்றும் நான்கு பிளே ஆஃப் போட்டிகள் நடைபெற உள்ளன. முதலாவது குவாலிஃபயர் மற்றும் எலிமினேட்டர் போட்டி திண்டுக்கல்லில் நடக்கிறது. 2வது குவாலிஃபயர் போட்டி சென்னையில் நடைபெற உள்ளது. ஆகஸ்ட் 4ம் தேதி இறுதிப்போட்டி சென்னை சேப்பாக் மைதானத்தில் நடைபெற உள்ளது. கடந்த ஆண்டு கடைப்பிடிக்கப்பட்ட DRS மற்றும் பிளே ஆஃப் போட்டிகளுக்கான ரிசர்வ் டே நடைமுறை இந்த ஆண்டும் கடைப்பிடிக்கப்பட உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்