எதிர் பாரத நேரத்தில் குவிந்த ரன்கள்.. திக்.. திக்.. கடைசி நிமிடத்தில் மாறிய ஆட்டம்

x

பஞ்சாப்பின் முலான்பூர் நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் தவான் பவுலிங் தேர்வு செய்தார்.

ஹைதராபாத் அணியில் தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் 21 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மார்க்ரம் டக் அவுட் ஆனார். மற்றொரு தொடக்க வீரர் அபிஷேக் சர்மா 16 ரன்களில் கேட்ச் ஆனார். இதனால் ஆரம்பத்தில் ஹைதராபாத் தடுமாறியது.

எனினும் நிதிஷ் ரெட்டி அதிரடியாக விளையாடி ஹைதராபாத்தை சரிவில் இருந்து மீட்டார். அரைசதம் அடித்த நிதிஷ் ரெட்டி 64 ரன்களில் அவுட் ஆனார்.

கடைசி ஓவர்களில் அப்துல் சமாத் மற்றும் சபாஷ் அகமது விரைவாக ரன் சேர்த்ததால் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு ஹைதராபாத் 182 ரன்கள் குவித்தது.

தொடர்ந்து 183 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய பஞ்சாப் அணியில் தொடக்க வீரர் பேர்ஸ்டோ டக் அவுட் ஆனார். கேப்டன் தவான் 14 ரன்களில் வெளியேறினார்.

சற்று நேரம் தாக்குப் பிடித்த சாம் கரண் 29 ரன்களும் சிக்கந்தர் ராசா 28 ரன்களும் எடுத்து பெவிலியன் திரும்பினர். சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பஞ்சாப் இழந்ததால் தேவைப்படும் ரன் விகிதம் அதிகரித்தது.

கடைசி கட்டத்தில் சஷாங் சிங், அஷூதோஸ் சர்மா ஜோடி அதிரடியாக விளையாடியது. உனத்கட் வீசிய கடைசி ஓவரில் பஞ்சாப் வெற்றிக்கு 29 ரன்கள் தேவைப்பட, இருவரும் சேர்ந்து 26 ரன்கள் அடித்தனர். 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு பஞ்சாப் 180 ரன்கள் எடுத்தது. 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஹைதராபாத், நடப்பு தொடரில் மூன்றாவது வெற்றியை பதிவு செய்தது.


Next Story

மேலும் செய்திகள்