தேசிய சாதனையை முறியடித்த குல்வீர் சிங் - 41 வினாடிகளில் பறிபோன ஒலிம்பிக் வாய்ப்பு

x

ஆடவர் 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இந்தியாவைச் சேர்ந்த தடகள வீரர் குல்வீர் சிங் தேசிய சாதனையை முறியடித்தார். கலிஃபோர்னியாவில் நடைபெற்ற ஒலிம்பிக் தகுதிச் சுற்றுப் போட்டியில் 10 ஆயிரம் மீட்டர் பந்தய தூரத்தை 27 நிமிடம் 41 வினாடிகளில் குல்வீர் சிங் கடந்தார். இதன்மூலம் 16 ஆண்டு கால தேசிய சாதனையை குல்வீர் சிங் கடந்தார். எனினும் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற 27 நிமிடங்களுக்குள் பந்தய தூரத்தை கடக்க வேண்டும் என்பதால் குல்வீர் சிங்கால் தகுதி பெற முடியாமல் போனது.


Next Story

மேலும் செய்திகள்