வெல்ல துடிக்கும் குஜராத்.. வெற்றியை தக்க வைக்குமா ராஜஸ்தான்..சூடு பிடித்த IPL களம்..

x

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 24வது லீக் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணியும் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் அணியும் மோத உள்ளன. ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு இந்தப் போட்டி தொடங்க உள்ளது. ராஜஸ்தான் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை தோல்வியே காணவில்லை. ஆடிய நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்றிருப்பதால் வெற்றி நடையை ராஜஸ்தான் தொடர முயற்சிக்கும். தொடர்ச்சியாக 2 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ள குஜராத் வெற்றிப் பாதைக்கு திரும்ப முனைப்பு காட்டக்கூடும். ஐபிஎல் போட்டிகளில் இவ்விரு அணிகளும் இதுவரை 5 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் நான்கு முறை குஜராத்தும் ஒரு முறை ராஜஸ்தானும் வெற்றி பெற்றுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்