தொடர் தோல்வி - இன்று மீளுமா மும்பை? | IPL 2024

x

ஐபிஎல் டி20 தொடரில் இன்று 2 லீக் போட்டிகள் நடைபெற உள்ளன. மும்பை வான்கடே மைதானத்தில் பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கும் முதல் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை அணியும் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி அணியும் மோத உள்ளன. ஹாட்ரிக் தோல்வியை சந்தித்துள்ள மும்பை வெற்றிக்கணக்கை தொடங்க கடுமையாக போராடக்கூடும். இரவு 7.30 மணிக்கு லக்னோ ஏகனா மைதானத்தில் நடைபெறும் மற்றொரு லீக் போட்டியில் கே.எல் ராகுல் தலைமையிலான லக்னோ அணியும் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் அணியும் பலப்பரீட்சை நடத்த உள்ளன. சம பலம வாய்ந்த அணிகள் மோதும் இந்தப் போட்டி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்