CSK vs DC..! - தடுமாறிய முக்கியமான வீரர்கள்...கடைசி நேரத்தில் களமிறங்கிய தோனி!

x
  • ஐபிஎல் தொடரின் 13வது லீக் போட்டியில் சென்னை அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி வீழ்த்தியது.
  • விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட் பேட்டிங் தேர்வு செய்தார்.
  • தொடர்ந்து பேட்டிங்கை தொடங்கிய டெல்லி அணிக்கு பிரித்வி ஷா, டேவிட் வார்னர் தொடக்க ஜோடி அதிரடி தொடக்கம் தந்து முதல் விக்கெட்டுக்கு 93 ரன்கள் சேர்த்தது.
  • டேவிட் வார்னர் 35 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பிரித்வி ஷா 43 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார்.
  • கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய ரிஷப் பண்ட் 51 ரன்கள் சேர்த்தார். 20 ஓவர்களில் டெல்லி 5 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் குவித்தது.
  • தொடர்ந்து 192 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய சென்னை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது.
  • கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ஒரு ரன்னில் கலீல் அகமது வீசிய முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்தார்.
  • தடுமாற்றத்துடன் விளையாடிய ரச்சின் ரவீந்திரா 2 ரன்களில் வெளியேற 3வது விக்கெட்டுக்கு ரஹானே - மிட்செல் ஜோடி 68 ரன்கள் சேர்த்தது.
  • மிட்செல் 34 ரன்களுக்கும் ரஹானே 45 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, சமீர் ரிஸ்வி டக்-அவுட் ஆனார்.
  • துபே - ஜடேஜா பேட்டிங் பலன் அளிக்காமல் போன நிலையில், கடைசி கட்டத்தில் தோனி களமிறங்கி சிக்சர்களை பறக்கவிட்டார்.
  • இதனால் சென்னை அணியின் தோல்வி வித்தியாசம் குறைந்தது.
  • 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 6 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் மட்டுமே எடுக்க,
  • 20 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்று, நடப்பு தொடரில் முதல் வெற்றியைப் பதிவு செய்தது.

Next Story

மேலும் செய்திகள்