சாதனையின் உச்சியில் இந்திய வீரர்! கை நழுவிய அந்த ஒரு விக்கெட்! அஸ்வினை பதம் பார்க்கும் ENG வீரர்கள்

x

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில், இரண்டாவது போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் அஸ்வின் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். இதன்மூலம், 499வது விக்கெட்டை அவர் எட்டினார். இதையடுத்து, டாம் ஹார்ட்லி விக்கெட்டை அவர் வீழ்த்தியதும், 500வது விக்கெட் என்ற புதிய சாதனை படைத்ததாக ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். இருப்பினும், டி.ஆர்.எஸ். மூலம், டாம் ஹார்ட்லி தன் விக்கெட்டை தக்க வைத்துக்கொண்டார். இந்த சூழலில், ராஜ்கோட்டில் நடைபெறும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில், அஸ்வின் நிச்சயம் சாதனை படைப்பார் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மறுபுறம், அஸ்வின் தனிப்பட்ட சாதனைகளுக்காகவே விளையாடி வருகிறார் என இங்கிலாந்து முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் விமர்சித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்