மீண்டும் பதிலடி கொடுத்த இந்தியா.. வெஸ்ட் இண்டீஸை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி

x

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் நடைபெற்ற போட்டியில், முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய இந்திய அணி ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்த நிலையில் வெற்றி இலக்கை எட்டியது. இந்திய அணியில் அதிகபட்சமாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் 84 ரன்களும், சுப்மன் கில் 77 ரன்களும் குவித்தனர். 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இரண்டுக்கு இரண்டு என சமன் செய்துள்ளது. இந்நிலையில் இரு அணிகள் மோதும் ஐந்தாவது டி20 போட்டி, இதே மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. தொடரின் வெற்றியாளரை நிர்ணயிக்கும் போட்டி என்பதால் இன்றைய போட்டி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்