பாகிஸ்தானை வெளுத்தெடுத்த இந்தியா... பார்த்து ரசித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

x

ஆசிய ஆடவர் சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டியில், பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது...சென்னை, எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்ற 15வது மற்றும் இறுதி லீக் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். போட்டியின் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி, 4க்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தியது. இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் 2 கோல்களும், ஜக்ரா சிங் மற்றும் ஆகாஷ் தீப் சிங் ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்து அசத்தினர். இதன்மூலம், இந்திய அணி 13 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் முதலிடம் வகிக்க, 3 முறை சாம்பியனான பாகிஸ்தான் தொடரில் இருந்து வெளியேறியது.முன்னதாக முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி, சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் போட்டியை கண்டுகளித்தனர். இந்திய கிரிக்கெட் வீரர் அஷ்வின், சா்வதேச ஹாக்கி சம்மேளன தலைவா் முகமது தயப் இக்ராம் ஆகியோருக்கு முதலமைச்சர் நினைவுப் பரிசுகளையும் வழங்கினார்.


Next Story

மேலும் செய்திகள்