சத்தம் இல்லாமல் அடித்த இந்தியா.! சறுக்கி விழும் ஆஸ்திரேலியா... சூடுபிடிக்கும் டி20 கிரிக்கெட் போட்டி

x

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், 2 க்கு பூஜ்யம் என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கும் நிலையில், மூன்றாவது டி20 போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்று மாலை 7 மணிக்கு தொடங்குகிறது. மூன்றாவது போட்டியிலும் வெற்றி பெற்று, தொடரை கைப்பற்ற இந்திய அணியும், தொடரில் இருப்பை தக்க வைத்து கொள்ள ஆஸ்திரேலிய அணியும் முனைப்பு காட்டும் என்பதால், இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது


Next Story

மேலும் செய்திகள்