தொடரை வெல்ல தயாராகும் இந்தியா.. அனல் பறக்கப்போகும் ஆட்டம் | India vs South Africa

x

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையேயான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி, இன்று நடைபெறவுள்ளது.

தென் ஆப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, தற்போது ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. இந்தநிலையில், தொடரின் 3வது மற்றும் இறுதி போட்டி, இன்று நடைபெறவுள்ளது. தொடரின் முதல் போட்டியை இந்தியாவும், 2வது போட்டியை தென் ஆப்பிரிக்காவும் வென்றுள்ள நிலையில், இப்போட்டியை வென்று தொடரை கைப்பற்ற இரு அணிகளும் முயற்சிக்கு என்பதால், போட்டி விறுவிறுப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய நேரப்படி இப்போட்டி மாலை 4.30 மணிக்கு தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது


Next Story

மேலும் செய்திகள்