மகளிர் டி20 கிரிக்கெட்; இங்கிலாந்துக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா..?

x

இந்திய மகளிருக்கு எதிரான டி20 தொடரை, இங்கிலாந்து மகளிர் அணி கைப்பற்றியது. மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியா - இங்கிலாந்து மகளிர் அணிகள் மோதிய 2வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. முதலில் ஆடிய இந்திய அணி 80 ரன்களுக்கு சுருண்டது. அடுத்து ஆடிய இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றி இலக்கை எட்டியது. இதன்மூலம் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று, டி20 தொடரையும் இங்கிலாந்து மகளிர் அணி கைப்பற்றியது. இந்நிலையில் இரு அணிகள் மோதும் 3வது டி20 போட்டி, இதே மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.


Next Story

மேலும் செய்திகள்