தன் ரூட்டுக்கு திரும்பிய ரூட் - நொந்துபோன இந்திய பவுலர்கள்

x

இந்தியாவிற்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 353 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

இந்தியா - இங்கிலாந்து இடையிலான 4வது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. 2ம் நாள் ஆட்டம் இன்று காலை தொடங்கியது. நேற்று சதம் விளாசிய ரூட், தொடர்ந்து சிறப்பாக விளையாடினார். மறுமுனையில் ராபின்சன் அரைசதம் அடித்து 58 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 353 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது. நங்கூரம் பாய்ச்சியதைப் போல் விளையாடிய ஜோ ரூட், 122 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்தியா தரப்பில் ஜடேஜா 4 விக்கெட்டுகளையும் ஆகாஷ் தீப் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். முதல் இன்னிங்சில் இந்தியா தற்போது விளையாடி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்