ஐசிசி-யின் ஜனவரி மாத சிறந்த வீரர் விருதை வென்றார் மே.இ. வீரர்

x

ஐசிசி-யின் ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீரர் வீருது, மேற்கு இந்திய தீவுகள் அணி வீரர் ஷமர் ஜோசப்பிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் நடைபெற்ற ஆஸ்திரேலியா - மேற்கு இந்திய தீவுகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரில் அறிமுகமான ஷமர் ஜோசப், முதல் டெஸ்ட்டின் முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தொடர்ந்து காபாவில் நடைபெற்ற 2வது டெஸ்ட்டில் 2வது இன்னிங்சில், 7 விக்கெட்டுகளை வீழ்த்தி மேற்கு இந்திய தீவுகளின் வரலாற்று சிறப்புமிக்க வெற்றிக்கு காரணமாக அமைந்தார். இதனையடுத்து அவருக்கு, ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீரர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அயர்லாந்தின் ஆமி ஹண்டருக்கு, ஜனவரி மாதத்தின் சிறந்த வீராங்கனைக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்