ஐசிசியின் 2023 ஒருநாள் போட்டி அணி...பட்டியலில் இடம்பிடித்த 6 இந்திய வீரர்கள்..கேப்டனாக ரோகித் சர்மா

x

2023-ஆம் ஆண்டின் ஒருநாள் போட்டிக்கான அணியை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, ஐசிசி ஒருநாள் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தவிர விராட் கோலி, சுப்மன் கில், முகமது சிராஜ், குல்தீப் யாதவ், முகமது ஷமி உள்ளிட்ட 6 இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். தென்னாப்பிரிக்க வீரர் ஹென்ட்ரிஜ் கிளாஸன் விக்கெட் கீப்பராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் டிராவிஸ் ஹெட், டேரல் மிட்சல், மார்கோ யான்சென், ஆடம் சாம்பா ஆகியோரும் ஐசிசி அணியில் இடம்பிடித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்