நேற்று தோல்வியால் துவண்ட CSK ரசிகர்களுக்கு இன்னொரு அதிர்ச்சி

x

ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் 14 புள்ளிகளுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் முதலிடத்தில் நீடிக்கிறது.

தாங்கள் விளையாடிய எட்டு போட்டிகளில் ஏழில் ராஜஸ்தான் வெற்றி பெற்றுள்ளது. தலா 10 புள்ளிகளுடன் ரன் ரேட் அடிப்படையில் கொல்கத்தா இரண்டாம் இடத்திலும், ஐதராபாத் மூன்றாம் இடத்திலும், லக்னோ நான்காம் இடத்திலும் உள்ளன.

8 புள்ளிகள் வைத்துள்ள சென்னை அணி, நேற்றைய தோல்வியின் காரணமாக ஐந்தாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. அதே எட்டு புள்ளிகளுடன் ரன் ரேட் அடிப்படையில் குஜராத் ஆறாம் இடத்தில் உள்ளது. மும்பை, டெல்லி அணிகள் ஆறு புள்ளிகளுடன் ஏழு மற்றும் எட்டாம் இடத்திலும், பஞ்சாப் அணி நான்கு புள்ளிகளுடன் ஒன்பதாம் இடத்திலும் உள்ளன. இதுவரை விளையாடிய எட்டு போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றிபெற்று, இரண்டு புள்ளிகளுடன் பெங்களூரு அணி கடைசி இடத்தில் இருக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்