"தோனியின் ஆட்டத்தைப் பார்த்த நாள் முதல் அவர் ரசிகன் நான்" - முன்னாள் கிரிக்கெட் வீரர் கவாஸ்கர் நெகிழ்ச்சி

x

தோனியின் ஆட்டத்தை பார்த்த நாள் முதல் அவரது ரசிகராக இருப்பதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். கடந்த ஆண்டு தோனியிடம் ஆட்டோகிராஃப் பெற்றதை நினைவுகூர்ந்த கவாஸ்கர், தோனி தன்னை பல விதத்தில் கவர்ந்ததாகவும், மொத்த அணியும் மைதானத்தை சுற்றிவரும்போது ஆட்டோகிராஃப் பெறுவதுதான் சரியான நேரம் எனக் கருதி ஆட்டோகிராஃப் வாங்கியதாகவும் கூறியுள்ளார். தனது சட்டையில் தோனி ஆட்டோகிராஃப் போட்டது மகிழ்ச்சியான தருணம் என்றும் கவாஸ்கர் பேசியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்