உலக கோப்பை கிரிக்கெட் தொடர் - "நியூசிலாந்து அணியில் கேன் வில்லியம்சன் இடம்பெறுவார்"

x

உலக கோப்பைக்கான நியூசிலாந்து கிரிக்கெட் அணியில், கேன் வில்லியம்சன் இடம்பெறுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியின்போது, காயமடைந்த நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன், அதிலிருந்து மீண்டுவருகிறார். இன்னும் முழுமையாக குணமடையாததால் அவர், ஒருநாள் உலக கோப்பை தொடரில் விளையாடுவாரா என சந்தேகம் நிலவி வந்தது. இந்தநிலையில், உலக கோப்பைக்கான நியூசிலாந்தின் 15 பேர் கொண்ட அணியில், வில்லியம்சன் இடம்பெறுவார் என நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இருப்பினும் காயத்திலிருந்து குணமடைவதை பொறுத்தே, அவர் உலக கோப்பை தொடரில் விளையாடுவார் என, அந்த அணியின் பயிற்சியாளர் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்