இந்திய அணியிலிருந்து விராட் கோலி நீக்கம்..? - வெளியான முக்கிய தகவல்

x

வருகிற ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்த தொடருக்கு தேர்வு செய்யப்படும் இந்திய அணியில் நட்சத்திர வீரர் விராட் கோலி சேர்க்கப்பட மாட்டார் என கூறப்படுகிறது. வெஸ்ட் இண்டீஸ் ஆடுகளங்களுக்கு கோலியின் ஆட்ட முறை சரியாக இருக்காது என பிசிசிஐ கருதுவதாகவும், இளம் வீரர்களுக்கு வழி விடும் வகையில் கோலியிடம் கோரிக்கை வைக்க பிசிசிஐ திட்டமிட்டு இருப்பதாகவும் தெரிகிறது. ஐபிஎல் தொடரில் கோலி மிக அபாரமாக விளையாடினால் மட்டுமே டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் அவர் சேர்க்கப்படலாம் என்றும் கூறப்படும் நிலையில், கோலி ரசிகர்கள் இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்