ஆஸ்திரேலியாவால் மாறிய முடிவு... "இனிமேல் இப்படி தான்.." - திரும்பி பார்க்க வைத்த விதிமுறை

x

கிரிக்கெட்டில் பேட்டர் ஸ்டம்பிங் ஆவதை மூன்றாவது நடுவர் ரிவ்யூ செய்யும்போது, பந்து பேட்டில் பட்டு கேட்ச் ஆனதா என்பது குறித்தும் சோதிக்கப்பட்டு வந்தது. இதனை ஆஸ்திரேலியா போன்ற அணிகள் தவறாக பயன்படுத்தி வந்தன. இந்தநிலையில் ஐசிசி தனது விதிமுறையில் மாற்றம் செய்துள்ளது. அதன்படி ஸ்டம்பிங் ரிவ்யூ செய்யப்படும்போது, பேட்டர் வேறு எந்த வகையிலாவது ஆட்டமிழந்தாரா என்பது குறித்து சோதிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பந்துவீச்சாளர்களின் கால் சம்பந்தப்பட்ட அனைத்து வகையான நோ- பால்களையும், 3வது நடுவர் கண்காணிக்கும் வகையில், ஐசிசி விதிமுறைகளில் மாற்றம் செய்துள்ளது. இதுவரை, பந்துவீச்சாளர்கள் முன்னங்காலை கிரிஸூக்கு வெளியே வைத்து வீசும் நோ-பால்களை மட்டுமே, 3வது நடுவர் கண்காணித்து வந்தது குறிப்பிடத்தக்கது


Next Story

மேலும் செய்திகள்