கோலிக்கு தண்டனை கொடுத்த BCCI

x

நடுவருடன் வாக்குவாத‌த்தில் ஈடுபட்டதால், விராட் கோலிக்கு, கொல்கத்தாவுக்கு எதிரான போட்டி கட்டணத்தில் இருந்து 50 விழுக்காடு அபராதம் விதித்துள்ளது. கொல்கத்தா - பெங்களூரு இடையேயான லீக் ஆட்டத்தில், ஹர்சித் ராணா வீசிய பந்தில் விராட் கோலி அவுட் ஆனார். ஆனால், பந்து இடுப்புக்கு மேல் சென்றதாக கூறி, நடுவருடன் வாக்குவாத‌த்தில் ஈடுபட்டார். போட்டி முடிந்த பின்னரும் அம்பயர் முடிவு குறித்து விவாதித்துக்கொண்டே இருந்தார். நடுவருடன் கடுமையான வாக்குவாத‌த்தில் ஈடுபட்டதால், விதிமுறைகளை மீறியதாக, கொல்கத்தாவுக்கு எதிரான அந்த போட்டியின் கட்டணத்தில் இருந்து 50 விழுக்காடு அபராதம் விதிப்பதாக ஐ.பி.எல். நிர்வாகம் அறிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்