டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஆஸி. வீரர் வார்னர் ஓய்வு

x

சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஆஸ்திரேலிய தொடக்க வீரர் டேவிட் வார்னர் ஓய்வு பெற்றுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிராக சிட்னியில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டி, வார்னரின் கடைசி டெஸ்ட் ஆக அமைந்தது. தனது கடைசி இன்னிங்சில் அரைசதம் அடித்த வார்னர், 57 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். 112 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள வார்னர், 8 ஆயிரத்து 786 ரன்கள் அடித்துள்ளார். இதில் 26 சதங்களும் அடங்கும். ஓய்வு பெற்ற வார்னரை நெகிழ்ச்சியுடன் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்