2வது டி20 போட்டி நாளை தொடக்கம் - வெஸ்ட் இண்டீஸுக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா?

x

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி நாளை நடைபெறவுள்ளது. வெஸ்ட் இண்டீஸின் ஜார்ஜ் டவுனில் இந்திய நேரப்படி நாளை இரவு 8 மணிக்கு இந்தப் போட்டி தொடங்க உள்ளது. முதல் டி20 போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸிடம் இந்தியா அதிர்ச்சி தோல்வி அடைந்தது. முதல் போட்டியில் வென்ற உற்சாகத்துடன் வெஸ்ட் இண்டீஸ் இந்தப் போட்டியில் களமிறங்கக் கூடும். 2வது டி20 போட்டியில் சுதாரித்து ஆடி, வெஸ்ட் இண்டீஸுக்கு இந்தியா பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்