"29 சதங்கள்..6996 ரன்கள்..99.94 சராசரி."..கிரிக்கெட் பிதாமகர் பிராட்மேன் பிறந்த தினம்

x

கிரிக்கெட்டின் பிதாமகரான மறைந்த டான் பிராட்மேனின் பிறந்த நாளையொட்டி, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அவரை நினைவுகூர்ந்து உள்ளது.


கடந்த நூற்றாண்டின் தலைசிறந்த பேட்டரான ஆஸ்திரேலியாவின் டான் பிராட்மேன், 52 டெஸ்ட் போட்டிகளில், 29 சதங்களுடன் 6 ஆயிரத்து 996 ரன்கள் குவித்தவர்.


டெஸ்ட் போட்டிகளில் இவரது 99 புள்ளி 94 சராசரியே இன்றுவரை ஒரு பேட்டரின் அதிகபட்ச சராசரி ஆகும்.


ஐசிசி ஹால்-ஆஃப்-ஃபேம் விருதும் வழங்கப்பட்டு பிராட்மேன் கவுரவிக்கப்பட்டுள்ளார்.


பிராட்மேனின் 114வது பிறந்தநாள் இன்று கொண்டாட்டப்படும் நிலையில், அவரைப் புகழ்ந்து டுவிட்டரில் ஐசிசி பதிவிட்டு உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்