2 வது டி-20 போட்டியில் அசத்தல் வெற்றி - தொடரை வென்றது இந்தியா..!

இலங்கை அணிக்கு எதிரான 2 ஆவது டி-20 போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
x
இலங்கை அணிக்கு எதிரான 2 ஆவது டி-20 போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில், இலங்கை அணி 20 ஓவரில் 183 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய இந்தியா, 18 ஆவது ஓவரில் இலக்கை எட்டி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிரடியாக விளையாடிய ஷ்ரேயஸ் ஐயர் 74 ரன்களும், ஜடேஜா 45 ரன்களும் எடுத்தனர். இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் 2க்கு 0 என முன்னிலை பெற்ற இந்தியா, தொடரையும் கைப்பற்றியது. இதனிடையே 3வது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.

Next Story

மேலும் செய்திகள்