ஏடிபி கோப்பை டென்னிஸ் தொடர் - சாம்பியன் பட்டம் வென்றது கனடா
பதிவு : ஜனவரி 10, 2022, 04:38 PM
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற நாடுகளுக்கு இடையேயான ஏடிபி டென்னிஸ் தொடரில், கனடா சாம்பியன் பட்டம் வென்று உள்ளது.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற நாடுகளுக்கு இடையேயான ஏடிபி டென்னிஸ் தொடரில், கனடா சாம்பியன் பட்டம் வென்று உள்ளது. சிட்னி நகரில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஸ்பெயினும் கனடாவும் மோதின. இதன் முதல் ஆட்டத்தில் கனடா வீரர் ஷாபோவலோவ் (Shapovalov), ஸ்பெயின் வீரர் பாப்லோ புஸ்டாவை 6-க்கு 4, 6-க்கு 3 என்ற செட் கணக்கில் வென்றார். தொடர்ந்து நடைபெற்ற மற்றொரு போட்டியில், ஸ்பெயின் வீரர் ராபர்ட்டோவை கனடா வீரர் அஹர், 7-க்கு 6, 6-க்கு 3 என்ற செட்களில் வீழ்த்தினார். இதன்மூலம் 2-க்கு பூஜ்யம் என்ற கேம் கணக்கில், ஸ்பெயினை வென்று கனடா சாம்பியன் ஆனது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.