2 ஆவது நாள் டெஸ்ட் போட்டியில் இந்தியா 58 ரன்கள் முன்னிலை

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டியின் 2 ஆவது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 58 ரன்கள் முன்னிலையில் உள்ளது
x
தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் 2 ஆவது போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 202 ரன்கள் எடுத்த நிலையில் தென்னாப்பிரிக்க அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 229 ரன்கள் எடுத்தது.  இந்திய அணியில் அதிகபட்சமாக ஷர்துல் தாகூர் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதனையடுத்து 2 ஆவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 2 ஆவது நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 85 ரன்கள் எடுத்து 58 ரன்கள் முன்னிலையில் உள்ளது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால் ஆட்டமிழந்த நிலையில் ரகானே, புஜாரா ஆகியோர் களத்தில் உள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்