ஒரே இன்னிங்ஸ்... 10 விக்கெட்... இந்திய அணியை ஆல் அவுட் செய்த தனி ஒருவன்

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஒரே இன்னிங்ஸில் எதிரணியின் அனைத்து விக்கெட்டுகளையும் சாய்த்த மூன்றாவது வீரர் என்ற வரலாற்று சாதனையை அஜாஸ் பட்டேல் படைத்துள்ளார்.
x
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஒரே இன்னிங்ஸில் எதிரணியின் அனைத்து விக்கெட்டுகளையும் சாய்த்த மூன்றாவது வீரர் என்ற வரலாற்று சாதனையை அஜாஸ் பட்டேல் படைத்துள்ளார்.

கிரிக்கெட்டில் எப்போதாவது அரங்கேறும் அபூர்வ நிகழ்வு ஒன்று, சனிக்கிழமை நடைபெற்ற இந்தியா - நியூசிலாந்து டெஸ்ட் போட்டியில் நடந்தது.

மும்பை வான்கடேவில் சுழற்பந்து மாயாஜாலம் காட்டி, மட்டையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த அஜாஸ் பட்டேல், தனிஒருவராக இந்திய அணியை ஆல்-அவுட் செய்தார்

இதன்மூலம் ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய 3வது வீரர் என்ற மகத்தான சாதனையை படைத்தார் அஜாஸ்

மும்பையில் வளர்ந்தவரான அஜாஸ், மும்பை மைதானத்திலேயே சாதனை படைத்ததுதான் மாஸ்...

இவருக்கு முன்னதாக இந்த சாதனையை நிகழ்த்தியவர்கள் இரண்டு வீரர்கள்.

1956ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இங்கிலாந்து வீரர் ஜிம் லேக்கர் இந்த சாதனையை படைத்திருந்தாலும்,

இந்தியர்களுக்கு முதலில் நினைவுக்கு வருபவர் அனில் கும்ப்ளே தான்.. 

1999ல் டெல்லி மைதானத்தில் பாகிஸ்தானை ஆல்-அவுட் செய்து வரலாற்று சாதனை படைத்தார் கும்ப்ளே.

அதிலும் கும்ப்ளே சாதனைக்காக வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீநாத்,  அகலப்பந்துகளாக வீசி உதவியது ரசிகர்களுக்கு மறவா நினைவுகள்..

தற்போது, இந்திய அணிக்கு எதிரான போட்டியில் அற்புதம் நிகழ்த்தி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துவிட்டார் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஜாஸ் பட்டேல்.

சாதனையுடன் பெவிலியன் திரும்பியவரை நியூசிலாந்து வீரர்கள் மட்டுமல்ல, இந்திய வீரர்களும், ரசிகர்களும் கைத்தட்டி, ஆரவாரம் செய்தது அழகிய காட்சிகள்.

பிறந்த மண்ணில் சாதிக்க விரும்புகிறேன் என போட்டிக்கு முன் கூறியிருந்தார். தற்போது போட்டி முடிவதற்கு முன்னரே உலக சாதனை பட்டியலில் இணைந்து அசத்திவிட்டார், அஜாஸ் பட்டேல்.....


Next Story

மேலும் செய்திகள்