ஐபிஎல் : எந்த அணி யாரை தக்கவைக்கும்..?

ஐபிஎல் தொடரில் வீரர்கள் தக்கவைப்பதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவு பெறுகிறது. எந்தெந்த அணி, எந்தெந்த வீரர்களை தக்கவைக்கும்?
x
மீண்டும் 10 அணிகளுடன் அடுத்த ஆண்டு தொடங்கும் ஐபிஎல் தொடர், வீரர்கள் ஏலத்திற்கு தயாராகிவிட்டது. அதற்கு முன்னதாக ஒவ்வொரு அணியும் அதிகபட்சம் 4 வீரர்களை தக்கவைக்கலாம் எனவும், புதிய அணிகள் டிராஃப்ட் முறையில் மூவரை தேர்வு செய்யலாம் என ஐபிஎல் கமிட்டி அறிவித்தது. ஒரு அணி 4 வீரர்களை தக்கவைத்தால், முதல் வீரருக்கு 16 கோடி எனவும், அடுத்தடுத்த வீரர்களுக்கு 12 கோடி, 8 கோடி, 6 கோடி ரூபாய் முறையே ஊதியமாக வழங்கப்படும்.

3 வீரர்களை தக்க வைத்தால் முதல் வீரருக்கு 15 கோடி, 2வது வீரருக்கு 11 கோடி, 3வது வீரருக்கு 7 கோடியும், 2 வீரர்களை தக்க வைத்தால் முறையே 14 கோடி, 10 கோடி ரூபாயும், ஒரே வீரரை தக்கவைத்தால் 14 கோடி ரூபாய் ஊதியமாக வழங்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அணிக்கும் ஏலம் எடுக்க 90 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், 4 வீரர்களை தக்கவைக்கும் அணி, 33 கோடியுடன் மெகா ஏலத்தை சந்திக்கும்.

இந்த சூழலில், வீரர்கள் தக்கவைப்புக்கு கடைசி நாள் நவம்பர் 30ஆம் தேதி என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது இந்த சூழலில், சென்னை அணி ஜடேஜா, தோனி, ருத்துராஜ், மொயின் அலியை தக்கவைத்துள்ளதாக கூறப்படுகிறது. மும்பை அணி ரோகித், பும்ரா, பொல்லார்டு, இஷான் கிஷானையும் பெங்களூரு அணி கோலி, மேக்ஸ்வேல், சிராஜை தக்கவைத்துள்ளதாக பேசப்படுகிறது. டெல்லி அணி ரிஷப் பண்ட், பிர்த்வி ஷா, அக்‌ஷர் படேல், ஆன்ரிச் நோக்கியாவை தக்கவைத்துள்ளதாக கூறப்படுகிறது 

பஞ்சாப் அணியில் இருந்து கே.எல். ராகுல் விலகி, டிராஃப்ட் முறையில் புதிய அணியான லக்னோவிற்கு கேப்டனாக நியமிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. இவை அனைத்து தகவல்களாக உலாவி வரும் நிலையில், வீரர்கள் தக்கவைப்பு குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு இரவு 9.30 மணிக்கு வெளியாகிறது.

Next Story

மேலும் செய்திகள்