ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி தொடர் - காலிறுதிக்கு இந்தியா தகுதி

ஜூனியர் உலகக் கோப்பை ஆடவர் ஹாக்கி தொடரின் காலிறுதிப் போட்டிக்கு இந்தியா முன்னேறி உள்ளது.
x
ஜூனியர் உலகக் கோப்பை ஆடவர் ஹாக்கி தொடரின் காலிறுதிப் போட்டிக்கு இந்தியா முன்னேறி உள்ளது. குரூப் பி பிரிவில் நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் இந்தியாவும் போலந்தும் மோதின. போட்டியின் முதல் பாதியில் மூன்று கோல்கள் அடித்த இந்தியா, 2-வது பாதியில் மேலும் ஐந்து கோல்கள் அடித்து ஆதிக்கம் செலுத்தியது. போலந்து தரப்பில் 2 கோல்கள் மட்டுமே அடிக்கப்பட்ட நிலையில், ஆட்ட நேர முடிவில் 8-க்கு 2 என்ற கோல் கணக்கில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்தியா தரப்பில் துணை கேப்டன் சஞ்சய் 2 கோல்களும், ஹுன்டல், சிர்மஹோ தலா 2 கோல்களும் அடித்து அசத்தினர். இந்த வெற்றியால், காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற இந்தியா, டிசம்பர் 1-ம் தேதி நடைபெறும் காலிறுதிப் போட்டியில் பெல்ஜியத்துடன் பலப்பரீட்சை நடத்த உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்