இந்திய அணியில் மேலும் ஒருவருக்கு கொரோனா : இந்தியா Vs இங்கிலாந்து - 5வது டெஸ்ட் ரத்து

இந்திய அணியில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளதை அடுத்து, இந்தியா இங்கிலாந்து இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்திய அணியில் மேலும் ஒருவருக்கு கொரோனா : இந்தியா Vs இங்கிலாந்து - 5வது டெஸ்ட் ரத்து
x
இந்தியா , இங்கிலாந்து இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2 -1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. ஐந்தாவது டெஸ்ட் தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றாலோ அல்லது சம்மன் செய்தாலோ, தொடரை இந்தியா வென்று புது வரலாறு படைக்கும் என்பதால் இந்த போட்டி மீதான எதிர்ப்பார்ப்பு சற்று அதிகமாகவே இருந்தது... மான்செஸ்டர் நகரில் உள்ள ஓல்டு டிராபோர்ட் மைதானத்தில்  இதற்கு முன்பு இரு அணிகளுக்கு இடையே நடந்த 9 போட்டிகளில் ஒன்றில் கூட  இந்திய அணி வெற்றி பெறாததால் இம்முறை இந்திய அணி மீது ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருந்தனர்.

ஆனால் இந்திய கிரிக்கெட் அணியில் மேலும் ஒருவருக்கு கொரோனா உறுதியானதால் ரசிகர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பும் ஏமாற்றத்தில் முடிந்துள்ளது. ஏற்கானவே 4வது டெஸ்ட் போட்டியின் போது, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பவுலிங் பயிற்சியாளர் பரத் அருண்,  ஃபீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகியோருக்கு கொரோனா உறுதியானது. இதனையடுத்து அவர்கள் 3 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு இந்திய அணியின் உதவி பிசியோதெரபிஸ்ட் யோகேஷ் பார்மருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இவர் இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரோகித் சர்மா, புஜாரா, முகமது ஷமி, இசாந்த் சர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜாவுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் அடுத்த மாதம் 20 ஓவர் உலக கோப்பை தொடங்க உள்ள நிலையில், வீரர்களின் பாதுகாப்பை கருதி ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் விளையாட இந்திய அணி விரும்பாததாகவும், இதனால் இந்தியா- இங்கிலாந்து இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம். இதனால் இந்தியா-இங்கிலாந்து இடையேயான தொடரின் முடிவு என்ன ? என்பதை அறிந்துகொள்ள ரசிகர்கள் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்