இந்திய அணியின் ஆலோசகராக தோனி நியமனம் - ரசிகர்கள் உற்சாகம்
பதிவு : செப்டம்பர் 09, 2021, 06:32 PM
20 ஓவர் உலக கோப்பை தொடரில் விளையாட உள்ள இந்திய அணியின் ஆலோசகராக முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி நியமனம் செய்யப்பட்டப்பட்டதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
20 ஓவர் உலக கோப்பை தொடரில் விளையாட உள்ள இந்திய அணியின் ஆலோசகராக முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி நியமனம் செய்யப்பட்டப்பட்டதை அவரது ரசிகர்கள் கொண்டாடி  வருகின்றனர்.  

16 அணிகள் பங்கேற்கும் 7ஆவது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம்  17 ஆம் தேதி தொடங்கி, நவம்பர் 14 ஆம் தேதி வரையில் ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் ஆகிய நாடுகளில் நடைபெற உள்ளது. 

இந்த போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி விபரத்தை வெளியிட்டிருக்கும் பிசிசிஐ, யாரும் எதிர்பார்க்காத வகையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலில் இருந்து ஓய்வை அறிவித்த முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி, இந்திய அணியின் ஆலோசகராக செயல்படுவார் என அறிவித்தது.  

2007 ஆம் ஆண்டு நடந்த முதலாவது 20 ஓவர் உலக கோப்பை, 2011 ஆம் ஆண்டு ஒரு நாள் உலக கோப்பை, 2013-ம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை ஆகியவற்றை இந்திய அணிக்கு வென்று கொடுத்து வெற்றிகரமான கேப்டனாக ஜொலித்தவர் டோனி.  

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, சர்வதேச அளவில் சிறந்த கேப்டனாக விளங்கினாலும், வெற்றி கேப்டனாகவில்லை. அவரது தலைமையில் இந்திய அணி இதுவரையில் ஐஐசி கோப்பை எதையும் வெல்லவில்லை.

இந்நிலையில் நிதானம்.. வெற்றிகளை வசப்படுத்துவதில் சிறப்பான வியூகம்.. இக்கட்டத்தான தருணத்தில் சரியான முடிவுகளை எடுப்பதில் கைதேர்ந்தவரான தோனி அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தோனி நியமனம் குறித்து விளக்கம் அளித்திருக்கும் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா,  உயர்மட்ட ஆலோசனையில் தோனியின் பெயரை பரிந்துரை செய்ததும், அனைவரும் ஒரே பதிலாக சம்மதத்தை தெரிவித்தனர் என்றார். 

டோனி ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். 

சமூக வலைதளங்களில் வாத்தி கம்மிங்... இசையுடன் உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். 

சார்பட்டா பரம்பரை படத்தில் நடிகர் ஆர்யாவும், பசுபதியும் சைக்கிளில் அமர்ந்து செல்லும் காட்சியில் பேசும் வசணத்தை ஒப்பிட்டு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவும் ரசிகர்கள் மத்தியில் பெறும் வரவேற்பை பெற்றுள்ளது. 

டோனியின் வருகையை... இந்திய அணி, உலக கோப்பையை வென்றது போன்று அவரது ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

447 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

58 views

இருசக்கர வாகனத்தில் ஏற்பட்ட வெடிப்பு - சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழப்பு

பஞ்சாப்பின் ஃபாசில்கா பகுதியிலுள்ள ஜலாலாபாத் நேஷனல் வங்கி அருகே மோட்டார் சைக்கிளில் ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டது.

54 views

பிற செய்திகள்

14 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய வரலாறு - மீண்டும் 'தல' தோனி ரீஎன்ட்ரி

இதே நாளில்... 14 ஆண்டுகளுக்கு முன்பு டி20 உலக கோப்பையை வென்று, ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் பெருமை சேர்த்தது, தோனி தலைமையிலான இளம்படை...

212 views

அதிக வருமானம் ஈட்டும் கால்பந்து வீரர்கள்: மெஸ்ஸியை பின்னுக்கு தள்ளிய ரொனால்டோ

சர்வதேச அளவில் அதிக வருமானம் பெறும் வீரர்கள் பட்டியலில் மெஸ்ஸியை பின்னுக்கு தள்ளி கிறிஸ்டியானோ ரொனால்டோ முதலிடம் பெற்றுள்ளார். இதன் விவரத்தை தற்போது பார்க்கலாம்

10 views

சூதாட்ட தரகர்களுக்கு தீபக் ஹூடா சிக்னல்..?

துபாயில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஐ.பி.எல். போட்டிக்கு முன், பஞ்சாப் அணி வீர‌ர் தீபக் ஹூடா வெளியிட்ட புகைப்படத்தால் சர்ச்சை எழுந்துள்ளது.

24 views

ஐ.பி.எல். 33-வது லீக் ஆட்டம் - டெல்லி அணி அபார வெற்றி

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் தொடரின் 33-வது லீக் ஆட்டத்தில், ஐதராபாத் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி அணி அபார வெற்றி பெற்றது.

9 views

கிரிக்கெட் வீர‌ர் நடராஜனுக்கு கொரோனா - விஜய் சங்கர் உள்ளிட்ட 6 பேர் தனிமை

கிரிக்கெட் வீர‌ர் நடராஜனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

18 views

பாக். - இங்கிலாந்து கிரிக்கெட் தொடர் ரத்து : இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்

நியூசிலாந்தைத் தொடர்ந்து இங்கிலாந்தும், பாகிஸ்தானுடனான கிரிக்கெட் தொடரை ரத்து செய்வதாக தெரிவித்து உள்ளது

25 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.