மறக்க முடியாத தொடரான பாராலிம்பிக் - வரலாற்றில் அதிக பதக்கம் வென்ற தொடர்

பாராலிம்பிக் வரலாற்றில் இந்தியா அதிக பதக்கங்களை வென்ற தொடராக டோக்கியோ பாராலிம்பிக் தொடர் அமைந்துள்ளது. முந்தைய செயல்பாடுகளை ஒப்பிடுகையில் தற்போதைய செயல்பாடு எப்படி இருந்தது? விரிவாக பார்ப்போம்
மறக்க முடியாத தொடரான பாராலிம்பிக் - வரலாற்றில் அதிக பதக்கம் வென்ற தொடர்
x
ஒலிம்பிக் தொடரின் இறுதிக்கட்டத்தில் நீரஜ் சோப்ரா ஈட்டியை எறிந்து எப்படி இந்தியர்களை கொண்டாட வைத்தாரோ, அதேபோல பாராலிம்பிக்கிலும் பேட்மிண்டன் வீரர் கிருஷ்ணா நாகர் கடைசி பதக்கமாக தங்கத்தை வென்று மகிழ்ச்சியில் திளைக்க வைத்தார். ஒட்டுமொத்தத்தில் 2020 டோக்கியோ ஒலிம்பிக், பாராலிம்பிக் தொடர், வரலாற்றில் மறக்க முடியாத, மகிழ்ச்சியை தரக்கூடிய ஒன்றாக அமைந்துவிட்டது. குறிப்பாக பாராலிம்பிக் நட்சத்திரங்கள் தேசத்தை பெருமை அடைய வைத்துள்ளனர்.

1960களில் இருந்து நடைபெற்று வரும் மாற்றுத்திறனாளிகளுக்கான பாரலிம்பிக் தொடரில் இந்தியா முதன்முதலில் பதக்கம் வென்ற ஆண்டு 1972. நீச்சல் வீரர் முரளிகாந்த் பெட்கர் தங்கம் வென்று கொடுத்தார். அதன் பின்னர் 1984ஆம் ஆண்டு 2 வெள்ளி, 2 வெண்கலம். 2004ம் ஆண்டு ஒரு தங்கம், ஒரு வெண்கலம், 2012ஆம் ஆண்டு ஒரு வெள்ளி 2016ஆம் ஆண்டு தமிழக வீரர் மாரியப்பன் வென்றது உட்பட 2 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என ஒட்டுமொத்தமாக பாராலிம்பிக் வரலாற்றில் 12 பதக்கங்களை மட்டுமே வென்றிருந்தது இந்தியா.

ஆனால் நடந்து முடிந்த டோக்கியோ பாராலிம்பிக் தொடர், இந்தியாவின் புதிய அத்தியாயம். 5 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 19 பதக்கங்களை குவித்து 24வது இடம் பிடித்து அசத்தியுள்ளது, இந்தியா. தடகளத்தில் 8 பதக்கங்கள், துப்பாக்கிச் சூட்டில் 5, பேட்மிண்டனில் 4, வில்வித்தை, டேபிள் டென்னிஸில் தலா ஒரு பதக்கத்தை வென்றுள்ளது. குறிப்பாக துப்பாக்கிச்சூட்டில் அவானி லெஹரா தங்கம், வெண்கலம் என 2 பதக்கங்கள், சிங்கராஜ் வெள்ளி, வெண்கலம் என 2 பதக்கங்களை வென்று வரலாற்று சாதனை படைத்தனர். பதக்கம் வெல்வது ஒருபக்கம் என்றால் வீரர்கள் பங்களிப்பிலும் இந்த தொடர் ஒரு மைல்கல் தான். இந்த முறை பதக்க எண்ணிக்கையான 19 தான், 2016ம் ஆண்டு நடைபெற்ற ரியோ பாராலிம்பிக்கில் இந்திய அணியின் ஒட்டுமொத்த பலம் வரலாற்றில் அதிக எண்ணிக்கையாக 2020ல் 54 போட்டியாளர்கள் இந்தியா சார்பில் பங்கேற்றனர் இப்படி, கடந்த காலங்களை ஒப்பிடுகையில், ஒலிம்பிக், பாராலிம்பிக் என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டுள்ளது டீம் இந்தியா.

Next Story

மேலும் செய்திகள்