அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர்: காலிறுதிக்கு ஆனி ஃபெர்னான்டஸ் தகுதி

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் 19 வயது இளம் வீராங்கனை, காலிறுதிக்குள் நுழைந்து அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளார்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர்: காலிறுதிக்கு ஆனி ஃபெர்னான்டஸ் தகுதி
x
மகளிர் ஒற்றையர் பிரிவு 4-ம் சுற்று ஆட்டத்தில், ஜெர்மனி வீராங்கனை கெர்பரும், கனடாவை சேர்ந்த இளம் வீராங்கனை ஆனி ஃபெர்னான்டஸும் மோதினர். இதில் முதல் செட்டை கெர்பர் வென்ற நிலையில், அடுத்த செட்டை ஃபெர்னான்டஸ் தனதாக்கினார். இதனால், ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், 3-வது செட்டை 6-க்கு 2 என்ற கணக்கில் வென்று, முன்னணி வீராங்கனை கெர்பருக்கு, ஃபெர்னான்டஸ் அதிர்ச்சி அளித்தார். இதன்மூலம், ஃபெர்னான்டஸ் காலிறுதிக்குள்ளும் நுழைந்தார். 19 வயதே ஆகும் ஆனி ஃபெர்னான்டஸ், 3-வது சுற்றில் முன்னணி வீராங்கனை ஒசாகாவை வென்றார். தற்போது மற்றொரு முன்னணி வீராங்கனை கெர்பரையும் அவர் வீழ்த்தி இருப்பது, அனைவரின் கவனத்தையும் ஈர்த்து உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்