டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் - வெண்கல பதக்கம் வென்ற லவ்லினா

டோக்கியோ ஒலிம்பிக்கில், இந்திய வீரர்களின் சிறப்பான பங்களிப்பால் ஆகஸ்ட் 4ம் தேதி மிக முக்கிய நாளாக அமைந்திருக்கிறது.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் - வெண்கல பதக்கம் வென்ற லவ்லினா
x
டோக்கியோ ஒலிம்பிக்கில், இந்திய வீரர்களின் சிறப்பான பங்களிப்பால் ஆகஸ்ட் 4ம் தேதி மிக முக்கிய நாளாக அமைந்திருக்கிறது. இதற்கான காரணம் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு நம்பிக்கை தரும் நாளாக ஆகஸ்ட் 4 அமைந்திருக்கிறது.மகளிர் வெல்டர் வெயிட் குத்துச்சண்டை போட்டியில், இந்தியாவுக்கு ஏற்கெனவே பதக்கத்தை உறுதிசெய்த லவ்லினா போர்கோஹெயின், அரையிறுதியில் உலக சாம்பியனான துருக்கி வீராங்கனை சுர்மனேலியிடம் தோல்வி அடைந்தார்.இதன்மூலம், வெண்கலப் பதக்கம் கிடைத்தது.மேலும், 57 கிலோ எடைப்பிரிவு மல்யுத்தப் போட்டியில், இந்திய வீரர் ரவிக்குமார் தாஹியா, அரையிறுதியில் கஜகஸ்தான் வீரர் நூரிஸ்லாம் சனாயேவ் - ஐ வீழ்த்தினார்.
இறுதிப்போட்டிக்கு முன்னேறிய ரவிக்குமார் தாஹியா, இந்தியாவிற்கு வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.வெற்றி பெற்றால் தங்கம் கிடைக்கவும் வாய்ப்புள்ளது.அதேசமயம், 86 கிலோ எடைப்பிரிவு மல்யுத்தப் போட்டியில், இந்திய வீரர் தீபக் பூனியா, அமெரிக்க வீரர் டேவிட் மாரிஸ் டெய்லரிடம் தோல்வியை தழுவினார். இருப்பினும், வியாழக்கிழமை நடக்கும் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் வெல்வாரா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.இதேபோல், ஈட்டி எறிதல் போட்டியின் தகுதிச்சுற்றில் பங்கேற்ற இந்தியாவின் நீரஜ் சோப்ரா, 86.65 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் மற்றும் உலக சாம்பியனாக பார்க்கப்படும் நீரஜ் சோப்ராவின் வெற்றி, ஈட்டி எறிதலில் இந்தியாவுக்கு  பதக்கத்தை வென்று தரும் என்ற நம்பிக்கையை தந்திருக்கிறது.ஒலிம்பிக் வரலாற்றில் முதன்முறையாக அரையிறுதிக்கு முன்னேறி நம்பிக்கை அளித்த இந்திய மகளிர் ஹாக்கி அணி, அர்ஜெண்டாவுடன் களம் கண்டது. இந்தப் போட்டியில் 1 - 2 என்ற கணக்கில் தோல்வியை தழுவிய இந்திய அணி, 6ம் தேதி வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் பிரிட்டன் அணியை எதிர்கொள்கிறது.  இவ்வாறாக ஒலிம்பிக்கில் இந்தியாவின் பதக்க கனவுக்கு வீரரகள் நம்பிக்கை சேர்க்கிறார்கள்.


Next Story

மேலும் செய்திகள்