ஒலிம்பிக் - தடகள போட்டியில் 5 தமிழர்கள்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இரண்டாவது முறையாக தேர்வாகியுள்ளார், திருச்சி லால்குடியை அடுத்த வழுதியூர் கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஆரோக்கிய ராஜீவ்
ஒலிம்பிக் - தடகள போட்டியில் 5 தமிழர்கள்
x
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இரண்டாவது முறையாக தேர்வாகியுள்ளார், திருச்சி லால்குடியை அடுத்த வழுதியூர் கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஆரோக்கிய ராஜீவ்.... இவரது ஒலிம்பிக் பயணம் குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம். தாய்லாந்து, இலங்கை, சவூதி அரேபியா ஆகிய நாடுகளில் நடந்த சர்வதேச போட்டிகளில் இந்தியா சார்பில் கலந்து கொண்டு தங்கம் வென்று சாதனை படைத்தவர், ஆரோக்கிய ராஜீவ்...
இன்று இரண்டாவது முறையாக தனது ஒலிம்பிக் கனவை நோக்கி பயணிக்கும் இவரை அர்ஜூனா விருது வழங்கி கவுரவித்திருந்தது, இந்திய அரசு.. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே  வழுதியூர் கிராமத்தில் விவசாய கூலி தொழிலாளிகளான செளந்தரராஜன் - லில்லி சந்திரா தம்பதியினருக்கு பிறந்தவர் தான்... ஆரோக்கியராஜீவ் திருமணமான இவருக்கு அனுஷியா என்ற மனைவியும் அதினா என்ற பெண் குழந்தையும் உள்ளது. தனது 13 வயது முதலே விளையாட்டு போட்டிகளில் ஆர்வமுடன் கலந்து கொண்டு வந்த ஆரோக்கிய ராஜீவ், படிப்பு போக பெரும்பாலான நேரத்தை தாம் படித்த  லால்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்திலேயே கழித்துள்ளார். கல்லூரியில் படித்து கொண்டிருந்த போதே,  இவருக்கு ஊட்டியில் உள்ள வெலிங்டனில்  ராணுவ எம் ஆர் சி இல் சிப்பாய் வேலை கிடைத்ததால் கல்லூரிப் படிப்பை பாதியிலேயே விட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. ருப்பினும் பணியில் இருந்துகொண்டே தொடர்ந்து சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்டு வந்தார், ஆரோக்கிய ராஜீவ்...


Next Story

மேலும் செய்திகள்