டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி... இந்தியா-நியூசிலாந்து இன்று தொடக்கம்

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி... இந்தியா-நியூசிலாந்து இன்று தொடக்கம்
x
டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி... இந்தியா-நியூசிலாந்து இன்று தொடக்கம் 

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கிய டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடர் பல்வேறு கட்டங்களாக  நடந்தது. அதில், அதிக புள்ளிகள் பெற்றதன் அடிப்படையில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறின. இந்நிலையில், இந்தியா - நியூசிலாந்து மோதும் இறுதிப் போட்டி இன்று இங்கிலாந்தில் தொடங்குகிறது. சவுதாம்ப்டனில் உள்ள தி ரோஸ் பவுல் மைதானத்தில், இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு இந்தப் போட்டி தொடங்குகிறது. போட்டியில் பங்கேற்க உள்ள கோலி தலைமையிலான 11 வீரர்கள் அடங்கிய இந்திய அணி அறிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு உலக கோப்பை அரையிறுதி ஆட்டத்தில், நியூசிலாந்திடம் இந்தியா தோற்றது. இந்நிலையில், இதற்கு பழிதீர்க்கும் விதமாக, இப்போட்டியில் இந்தியா வெற்றி பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்து உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்