இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடர் : நடராஜன் இல்லை - தமிழக ரசிகர்கள் அதிர்ச்சி

இங்கிலாந்து அணியுடனான முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடர் : நடராஜன் இல்லை - தமிழக ரசிகர்கள் அதிர்ச்சி
x
விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில், ரகானே துணை கேப்டனாகவும், சஹா , ரிஷப் பண்ட் கீப்பராகவும் தேர்வாகியுள்ளனர். மேலும், ரோகித் சர்மா, மயங்க் அகர்வால், புஜாரா, ராகுல், அஷ்வின், குல்தீப், அக்சார், சுந்தர், இஷாந்த், பும்ரா, சிராஜ், தாகூர் ஆகியோரும் அணியில் இடம் பெற்றுள்ளனர். இந்த இரு டெஸ்ட் போட்டிகளும் சென்னையில் நடைபெற உள்ளதால், தமிழக ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதேசமயம், ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி 20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தன் பங்கை சிறப்பாக செய்த தமிழக வீர‌ர் நடராஜன் நெட் பவுலராக கூட சேர்க்கப்படாத‌து, தமிழக ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்